தமிழக பொலிஸில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு தொடர்ந்து செயற்படும் என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது, 

‘தமிழகத்தில் கடத்தப்பட்ட சிலைகளை மீட்கும் பணிகளில் எந்தவித தொய்வும் ஏற்படாது.

மீட்கப்பட்டுள்ள சிலைகள் அனைத்தும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் கண்காணிப்பில் உள்ளன.

மீட்கப்பட்ட சிலைகளை அந்தந்த கோவில்களுக்கு கொண்டு செல்வதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

குறித்த சம்பவம் தொடர்பாக நீதிமன்ற உத்தரவிற்காக காத்திருக்கிறோம். கடத்தப்பட்டுள்ள மற்ற சிலைகளை மீட்பதற்காக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு தொடர்ந்து செயற்படும்.

அந்த காவல் பிரிவை மூடும் எண்ணம் தமிழக அரசிற்கு இல்லை. எனவே சிலை கடத்தல் தடுப்பு பிரிவினரின் பணிகளில் எந்தவித தொய்வும் ஏற்படாது.

சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் ஒரு சில வழக்குகள் மட்டுமே சி.பி.ஐக்கு மாற்றப்பட்டிருக்கிறது. இது குறித்து நீதிமன்றத்திலும் விளக்கம் அளித்திருக்கிறோம்.

சிலை கடத்தல் யார் ஆட்சியிலும் நடந்திருக்கலாம். அப்படி கடத்தப்பட்ட சிலைகள் அ.தி.மு.க. ஆட்சியில் தான் மீட்கப்பட்டுள்ளன.’என்றார்.