வித்தக கவிஞர் பா.விஜய் நடித்து, தயாரித்து இயக்கிய ஆருத்ரா படத்தின் ஒடியோ வெளியீடு இன்று நடைபெற்றது.

இன்று தனியார் தொலைகாட்சி ஒன்றில் நடைபெற்ற நேரலை நிகழ்வில் வில் மேக்கர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் வித்தக கவிஞர் பா.விஜய் நடித்து, தயாரித்து இயக்கிய ஆருத்ரா படத்தின் ஓடியோ வெளியீடு நடைபெற்றது. இதில் நடிகை குஷ்பு பங்குபற்றி ஓடியோவை வெளியிட்டார்.

இந்த நிகழ்வில் பா.விஜய், நடிகையும், தயாரிப்பாளருமான குஷ்பு, பாடகி வர்சா, பாடகர் கார்த்திக், நடிகைகள் மேகாலீ மற்றும் சஞ்சனா சிங் ஆகியோர்கள் பங்குபற்றினர்.

படத்தைப்பற்றி இயக்குநர் பா.விஜய் பேசுகையில்,

‘ சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் குறித்து பெற்றோர்கள் எவ்வாறு விழிப்புணர்வு பெறவேண்டும் என்பதை மையப்படுத்தி உருவாகியிருக்கிறது இந்த ஆருத்ரா. இந்த படம் சரியான தருணத்தில் வெளியாகி, எதிர்பார்த்த அளவிற்கு பெற்றோர்களின் ஆதரவைப் பெறும் என்று நம்புகிறேன்’ என்றார்.