சிறுநீரக விற்பனையில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் 6 இந்தியப் பிரஜைகளை குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

குறித்த அறுவரையும் வெள்ளவத்தைப் பகுதியில் வைத்து குற்றத் தடுப்புப் பிரிவினர் கைதுசெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கைதுசெய்யப்பட்ட நபர்கள் தொடர்பில் குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.