அங்குனகொலபெலஸ்ஸ பகுதியில் விசமருந்திய 11 வயது பாடசாலை மாணவி சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.

கரகஹவல – அங்குனகொலபெலஸ்ஸ பகுதியில் தரம் 6இல் கல்வி கற்று வரும் 11 வயதான நெத்மி சமன்மில குருசிங்ககே தர்மசேன என்ற சிறுமியே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

சிறுமி விசமருந்தியமைக்கான காரணம் இது வரை வெளிவராத நிலையில் தீவிர விசாரணையில் அங்குனனொலபெலஸ்ஸ பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக தங்காலை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டள்ளமை குறிப்பிடத்தக்கது.