எம்.எம்.மின்ஹாஜ்

காலஞ்சென்ற இந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ் பாயின் இறுதி கிரியையில் இலங்கை அரசாங்கம் சார்பாக கலந்து கொள்வதற்காக  பாராளுமன்ற சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷமன் கிரியெல்ல இந்தியா பயணமாகியுள்ளார்.

முன்னாள் பிரதமர் வாஜ் பாயின் இறுதி கிரியைகள் இன்று மாலை நடைபெறவுள்ள நிலையில் இலங்கை அரசாங்கம் சார்பாக பாராளுமன்ற சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷமன் கிரியெல்ல கலந்து கொள்ளவுள்ளார்.

நீண்டகாலம் நோய் வாய்ப்பட்டிருந்த இந்தியாவின் முன்னாள் பிரதமர் தனது 93 வயதில் நேற்று காலமானார்.

இந் நிலையில் அவரது மறைவையொட்டி பல நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.