கர்ப்பிணியாகவிருந்த பிரபல நடிகை அரை நிர்வாண கோலத்தில் சடலமாக மீட்பு!!!

Published By: Digital Desk 7

17 Aug, 2018 | 11:34 AM
image

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல நடிகை லிரிக் மெக்கென்ரி கடந்த செவ்வாய்க்கிழமை காலை 5 மணியளவில் அதிவேக நெடுஞ்சாலையில் அரை நிர்வாணக் கோலத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

லிரிக் 20 வாரக் கருவை சுமந்து கொண்டிருந்த கர்ப்பிணித் தாயாவார்.

சம்பவ தினமான கடந்த 14ஆம் திகதி காலை 5 மணியளவில் அதி வேக நெடுஞ்சாலையில் இளம் பெண் ஒருவரின் சடலம் அரை நிர்வாணமாக கிடக்கிறது என கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் குறித்த சடலத்தை மீட்டு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

பின்னர் பொலிஸார் விரைந்து மேற்கொண்ட விசாரணையில் சடலமாக மீட்கப்பட்டவர் நடிகை லிரிக் மெக்கென்ரி என தெரிய வந்துள்ளது. 

லிரிக்கின் மரணம் தொடர்பாக அந் நாட்டு பொலிஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பிரால நடிகை லிரிக் மெக்கென்ரி அவரது 26ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நட்சத்திர விடுதி ஒன்றில் தனது நெருங்கிய நண்பர்களுக்கு மது விருந்தளித்துள்ளார்.

லிரிக்கின் பிறந்த நாள் விருந்து விடிய விடிய நடந்துள்ளது. பின்னர் வீட்டிற்கு அதி வேக நெடுஞ்சாலையில் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

பிரேத பரிசோதனை அறிக்கையின் படி லிரிக் அளவிற்கு அதிகமாக மது அருந்தி போதையிலேயே இறந்துள்ளார்.

கொக்கைன் என்ற போதை மருந்தiயும் அவர் சாப்பிட்டுள்ளதாக மருத்துவ அறிக்கை குறிப்பிடுகிறது.

மேலம் பரிசோதனையில் இவர் கர்ப்பமாக இருந்துள்ளமை தெரிய வந்துள்ளது.

லிரிக் சடலமாக மீட்பதற்கு 3 மணித்தியாலத்திற்கு முன்னர் இன்ஸ்டாகிராமில் தனது நெருங்கிய சிறு வயது நண்பருடன் எடுத்துக் கொண்ட பல புகைப்படங்களையும் வீடியோ காட்சிக்களையும் வெளியிட்டுள்ளார்.

லிரிக் அவராக சாலையில் நடந்து சென்ற போது மது அதிகமாக அருந்தியதால் உயிரிழந்துள்ளாரா? அல்லது அவருக்கு யாராவது வலுக்கட்டாயமாக மதுவை அருந்த வைத்து கொலை செய்து சடலத்தை சாலையில் கொண்டு வந்து போட்டனரா? என்ற கோணத்தில் தீவிர விசாரணைகளை நடாத்தி வருகின்றோம். என பொலிஸாரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“கர்ப்பமாக இருந்த என் மகள் அளவிற்கு அதிகமாக போதைப் பொருள் உட்கொண்டதால் இறந்துவிட்டார் என விசாரணைகள் முடியும் முன்னரே கூறுவது சரியல்ல, அதிகாரிகள் விசாரணைகளை நடாத்தி முடிவு செய்யட்டும்” என லிரிக்கின் தந்தை கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17