பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் மத்திய பிரிவு தோட்டத்தில் 49வயதுடைய குடும்பஸ்த்தர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இன்று காலை 10மணி அளவில் இடம் பெற்றுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த வீட்டில் தனிமையில் இருந்த வேலையிலேயே குறித்த நபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கபடுகிறது.

இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவர்  49வயது மதிக்கத்தக்க 03 பிள்ளைகளின் தந்தையான நாராயனன் அழகப்பன் என்பவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

எனவே, தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப் படவில்லையெனவும் சடலம் பொகவந்தலாவை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கபட்டுள்ளதோடு சட்டவைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக சடலம் நாவலப்பிட்டி மாவடட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

- எஸ்.சதீஸ்