அமெரிக்க இலக்குகள் மீது தாக்குதல்களை மேற்கொள்வதற்கான பயிற்சிகளில் சீனாவின் போர் விமானங்கள் ஈடுபடலாம் என பென்டகன் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பென்டகனின் வருடாந்த அறிக்கையிலேயே இந்த தகவல் இடம்பெற்றுள்ளது.

சர்வதேச அளவில் தனது செல்வாக்கை அதிகரிப்பதற்கான முயற்சிகளை சீனா தீவிரப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ள பென்டகன் சீனாவின் பாதுகாப்பு செலவீனம் வருடாந்தம் 190 பில்லியன் டொலர்கள் எனவும் பென்டகன் குறிப்பிட்டுள்ளது.

கடந்த மூன்று வருடகாலப்பகுதியில் சீனா இராணுவம் கடலில் காணப்படும் இலக்குகளை தாக்கும் பயிற்சியை தீவிரப்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ள பென்டகன் சீனா அமெரிக்கா மற்றும் அதன் நேசநாடுகளின் இலக்குகளை தாக்குவதற்கான பயிற்சியை தனது விமானப்படையினருக்கு வழங்கிவருகின்றது என கருதலாம் எனவும் குறிப்பிட்டுள்ளது.

சீனா இராணுவம் தனது நடவடிக்கைகளை விஸ்தரித்து வருகின்றது விமானப்படையினருக்கான இந்த பயிற்சிகள் மூலம் சீனா என்ன செய்தியை தெரிவிக்க முயல்கின்றது என்பது தெளிவாகவில்லை எனவும் பென்டகன் தெரிவித்துள்ளது.