யாழ். ஆனைக்கோட்டை, அரசடி பகுதியில் ஓடிக் கொண்டிருந்த கார் ஒன்று நேற்றிரவு 8 மணியளவில் தீப்பிடித்து எரிந்து தீக்கிரையாகியுள்ளது.

குறித்த காரில் மின் கசிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து புகை வெளிவர ஆரம்பித்துள்ளது. இதனையடுத்து காரில் பயணித்தவர்கள் காரிலிருந்து வெளியில் வர, கார் திடீரென தீ பிடித்து எரிந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் யாழ்.மாநகர சபை தீயணைப்பு பிரிவுக்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு பிரிவினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும் கார் முற்றாக கார் முற்றாக தீக்கிரையாகியுள்ளது.