(ஆர்.யசி)

இறுதி யுத்­தத்தில் காணாமல்­போனோர் பெயர்ப் பட்­டி­யலிலுள்ள பலர் வெளி­நா­டு­களில் மாற்றுப்­பெ­யர்­களில் உள்­ளனர். முதலில் சர்­வதேச நாடு­களிலுள்ள இலங்­கையர்கள் தங்கள் பெயர், விப­ரங்­களை வெளி­யிட வேண்டும். அதன் பின்­னரே இலங்­கையில் உண்­மையான காணா­மல்­போனோர் பட்­டி­யலை தயா­ரிக்க முடியும் என அர­சாங்கம்  தெரி­வித்­துள்­ளது. 

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் வாராந்த செய்­தி­யாளர் சந்­திப்பில் நேற்று கலந்­து­ கொண்ட கட்­சியின் ஊட­க ­பேச்­சா­ளரும்  அமைச்­ச­ரு­மான மஹிந்த சம­ர­சிங்க இதனை குறிப்­பிட்டார்.  

அவர் மேலும்  குறிப்­பி­டு­கையில்,

ஊட­க­வி­ய­லாளர் கீத் நொயார் கடத்­தப்­பட்ட விவ­காரம் குறித்து வாக்­குமூலம் பெற்­றுக்­கொள்ள முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவிற்கு அழைப்பு விடுக்­கப்­பட்­டி­ருந்­தது. பின்னர் சி.ஐ.டி. யினர் ஒத்­து­ழைப்­புடன் அவ­ரது வீட்­டி­லேயே வாக்­கு­மூ­லத்தை பெற்­றுக்­கொள்ள ஏற்­பா­டுகள் செய்­யப்­பட்­டுள்­ளன. முன்னாள் ஜனா­தி­பதி என்ற வகையில் மஹிந்த ராஜபக் ஷவை மதிக்க வேண்டும்.  அவ­ருக்­கான அங்­கீ­கா­ரத்தை கொடுக்க வேண்டும். ஆகவே அவ­ரது வீட்­டுக்கு சென்று  வாக்­கு­மூலம் எடுக்கும் நட­வ­டிக்கை உகந்­தது என நாமும் நினைக்­கின்றோம். 

அதேபோல் இவ்­வாறு கடந்த காலங்­களில் ஊட­க­வி­ய­லா­ளர்கள் கடத்­தப்­பட்­டமை, சித்­தி­ர­வதை செய்­யப்­பட்­டமை, கொல்­லப்­பட்­டமை என்­பன சர்­வ­தேச ரீதியில் இலங்­கையை பாரிய அழுத்­தங்­க­ளுக்கு உள்­ளாக்­கி­யது. மனித உரி­மைகள், ஊடக அடக்­கு­ முறை என்ற பல்­வேறு அழுத்­தங்கள் எழவும் இதுவே கார­ண­மாக அமைந்­தது.  கடந்த அர­சாங்­கத்தில் இவ்­வா­றான பல அசம்­பா­வி­தங்கள் இடம்­பெற்­றன. நாம் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு எதி­ரான  அடக்­கு­ மு­றையை   வன்­மை­யாக  கண்­டிக்­கின்றோம்.

 மேலும் போர் குற்­றங்கள் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும். எனினும் இறுதி யுத்­தத்தில் 40 ஆயிரம் பொது­மக்கள் கொல்­லப்­பட்­டனர் என்ற கணிப்பு தவ­றா­னது. தருஸ்மான் இலங்­கையை சரி­யாக கணிக்­காது தயா­ரித்த அறிக்­கையில் இதனை கூறி­யுள்ளார். எனினும் எமது இரா­ணுவம் பொது­மக்­களை இலக்­கு ­வைத்து ஒரு­போதும் யுத்­தத்தை முன்­னெ­டுக்­க­வில்லை. பொது­மக்­களை பாது­காத்து புலி­களை மட்­டுமே இலக்கு வைத்து யுத்­தத்தை முன்­னெ­டுத்­தனர். அத­னால்தான் இரா­ணு­வத்­தினர்  அதி­க­ளவில் கொல்­லப்­ப­டவும் கார­ண­மாக அமைந்­தது. 

அதேபோல் காணா­மல் ­போனோர்  விவ­கா­ரமே மிகப்­பெ­ரிய  அழுத்­தத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. அதி­க­மான பெயர்கள் காணாமல் ­போனோர் பட்­டி­யலில் உள்­ளன. எனினும் யுத்த காலத்தில் சர­ண­டைந்­த­தாக கூறப்­படும் நபர்கள் காணாமல் போன­தாக ஒட்­டு­மொத்­த­மாக  கரு­து­வதும் தவ­றா­னது. ஏனெனில் யுத்த காலத்தில் நாட்டை விட்டு வெளி­யே­றி­ய­வர்கள் எத்­தனை பேர் என்­ப­தற்­கான முழு­மை­யாக அறிக்கை வெளி­வி­வ­கார அமைச்­சிடம் இல்லை.  

மேற்கு நாடு­க­ளுக்கு சென்­ற­வர்கள் யார் என்ற  விப­ரங்கள் அந்­தந்த நாடு­களின் மூலம் வழங்­கப்­ப­டு­வதும் இல்லை. இலங்­கையில் இருந்து சென்­ற­வர்கள் பலர் தமது பெயர்­களை மாற்­றிக்­கொண்டு அந்­தந்த நாடு­களில் பதி­வா­கி­யுள்­ளனர். எனினும் உண்­மை­யான பெயர்கள் இங்கு காணா­மல்­போனோர் பட்­டி­யலில் உள்­ளது. முதலில் சர்­வ­தேச நாடு­களில் உள்ள இலங்­கை­யர்கள் பெயர் விப­ரங்­களை வெளி­யிட வேண்டும். அதன் பின்­னரே இலங்­கையில் உண்­மை­யான காணா­மல் ­போனோர் பட்­டி­யலை தயா­ரிக்க முடியும் என்றார்.