(இரோஷா வேலு) 

அம்பலாந்தோட்டை பகுதியில் சுற்றுலா பயணிக்களுக்கான விடுதியென்ற பேரில் நடாத்திச்செல்லப்பட்ட விபச்சார விடுதியொன்று சுற்றிவளைக்கப்பட்டு நால்வர் இன்று  கைது செய்யப்பட்டுள்ளனர். 

இச்சம்பவத்தில், அம்பலாந்தோட்டை, கொத்மல மற்றும் புத்தளம் பகுதிகளைச் சேர்ந்த 46, 26 மற்றும் 41 வயதுகளுடைய மூன்று பெண்களும் ஒரு ஆணும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

சுற்றுலா பயணிகள் அதிகம் நடமாடும் குறித்த பகுதியில் தங்குமிட வசதிகளை கொண்ட விடுதியென்ற போர்வையில் விபச்சார விடுதியொன்று இயங்குவதாக பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து குறித்த நால்வரும் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

விடுதியின் முகாமையாளர்களான ஆணும், பெண்ணொருவரும் உட்பட விபச்சாரத்துக்கு தயாராகவிருந்த மேலும் இரண்டு பெண்களுமே கைதுசெய்யப்பட்டனர். 

இவர்களை இன்று அம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர். 

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பலாந்தோட்டை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்