கொழும்பு, தலைமன்னாருக்கிடையிலான புகையிரத சேவைகள் நாளை முதல் எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு மதவாச்சி வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

தலைமன்னாருக்கும் மதவாச்சிக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள பாலமொன்றின் திருத்தப் பணிக் காரணமாகவே இந்த புகையிர சேவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.