நான் கலைஞரால் வளர்க்கப்பட்டவன் சலசலப்புகளிற்கு அஞ்சமாட்டேன், உள்ளும் புறமும் உருவாக்கப்படும் சவால்களிற்கு முகம்கொடுத்து வென்று காட்டுவேன் என மு.கா. ஸ்டாலின் தொண்டர்களிற்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

நாம் செய்து முடிக்க வேண்டிய பணிகள் நிறைய உள்ளன, தி.மு.க. ஆட்சியில் அனைத்து துறைகளிலும் முன்னணியில் திகழ்ந்த தமிழகத்தை தற்போதைய ஆட்சியாளர்கள் படுகுழியில் தள்ளியிருக்கின்றார்கள் எனவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மத்திய ஆட்சியார்கள் மதவெறியை விதைத்து மாநிலங்களின் உரிமைகளை பறித்துக்கொண்டிருக்கின்றார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தலைவரை இழந்த தி.மு.க.வில் என்ன நடக்கின்றது என்பதை மத்திய அரசாங்கத்திற்கே ஆர்வமும் அக்கறையும் அதிகமாக உள்ளது எனவும் ஸ்டாலின் தொண்டர்களிற்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.