நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் சிக்கி அறுவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில்  உகன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமனலபெந்த பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் 71 வயதையுடைய மோட்டார் சைக்கிளின் சாரதி உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, கிளிநொச்சியில் இருந்து இரணைமடு திசை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மீது இராணுவ ரக் ரக வாகனம் மோதியதில் மோட்டார் சைக்கிளின் சாரதியும் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் கந்தானை, ஆனியாகந்த பகுதயில் மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் 22 வயதுடைய இளைஞர் ஒருவரும் மிஹிந்தலை, பெரளுஹிந்த சந்தியில் மோட்டார் சைக்கிள் ஒன்று டிரக்டர் ரக வாகனம் ஒன்றுடன் மோதியதில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

மேலும் வெலிமட பகுதியில் பாதையை கடக்க முற்பட்ட பெண் ஒருவர் மீது பேருந்து ஒன்று மோதியதில் 51 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்ததுடன் குளியாப்பிட்டிய பகுதியில் பாதசாரிகள் கடவையூடாக பாதையை கடக்க முற்பட்ட ஒருவர் மீது லொறி மோதியதில் ஒருவரும் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.