கேரள மாநிலம் வெள்ள பெருக்காலும் மலை, மண் சரிவினாலும் பாதிக்கப்பட்டு மக்களின் வாழ்க்கை மிகவும் துயரத்துக்குள்ளாகியுள்ளது. 

வரலாறு காணாத இயற்கை சீற்றத்தை சந்தித்து வரும் அம்மாநில மக்களுக்கு தமிழ் திரை உலகம் நேசக்கரம் கொடுத்து உதவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

தென்னிந்திய நடிகர் சங்கம், நடிகர்கள் கமல் ,சூர்யா,கார்த்தி நடிகை ரோஹிணி ஆகியோர் ஏற்கெனவே நிதி உதவிகள் அளித்துள்ளனர்.

 இந்நிலையில்  மதுரையில் படப்பிடிப்பில் உள்ள தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவரும், நடிகர் சங்க பொதுசெயலாளருமான நடிகர் விஷால் கேரள முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு பத்து இலட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கியுள்ளார்.