மத்தியப்பிரதேசத்தில் உள்ள சுற்றுலா தளமான சுல்தான் கார் நீர்வீழ்ச்சியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
மத்தியப்பிரதேச மாநிலம், குவாலியரில் உள்ள சுற்றுலா தளமான சுல்தான் கார் நீர்வீழ்ச்சியில் நேற்று குறைவான அளவு தண்ணீர் வெளியேறியதால் சுற்றுலா பயணிகள் 50க்கும் மேற்பட்டோர் அங்குள்ள ஆற்றில் நீராடினர். ஆனால் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் ஆற்றில் திடீரென வெள்ளம் பெருக்கெடுத்தது.
இதனால், ஆற்றின் நடுவில் இருக்கும் பாறைகள் மீது இருந்த சுற்றுலா பயணிகள் செய்வதறியாது திகைத்தனர். இந்த திடீர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு 11 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 40க்கும் மேற்பட்டோர் வெள்ளம் சூழ்ந்த பாறைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
குறித்த நபர்களை மீட்கும் பணிகளில் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இதுவரை, பாறைகளில் சிக்கித்தவித்த 7 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
ஆற்றில் வெளியேறும் நீரின் அளவு அதிகரித்துள்ளதால் மீட்பு பணிக்கு இராணுவத்தை சேர்ந்த ஹெலிகொப்டர் வரை வரவழைக்கப்பட்டது. ஆனால், போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தினால் இன்று காலை ஹெலிகொப்டர் மூலம் பாறைகளின் மீது சிக்கியுள்ளவர்களை மீட்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என மாநில பேரிடர் மீட்பு குழு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்தியப்பிரதேச முதல்மந்திரி சிவராஜ் சிங் சவுகான் கூறுகையில், மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. உள்துறை அமைச்சர் மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் உதவி கோரப்பட்டுள்ளது. மீட்பு குழுவினருடன் தாம் நேரடி தொடர்பில் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM