இங்­கி­லாந்­துக்கு எதி­ரான இரு டெஸ்ட் போட்­டி­க­ளிலும் மோச­மான தோல்­வியைத் தழு­வி­யதால் பயிற்­சி­யாளர் ரவி­ சாஸ்­தி­ரியை நீக்­கி­விட்டு டிரா­விட்டை நிய­மிக்க வேண்டும் என்று இந்­திய ரசி­கர்கள் கருத்துத் தெரி­வித்­துள்­ளனர். 

விராட் கோஹ்லி தலை­மை­யி­லான இந்­திய கிரிக்கெட் அணி இங்­கி­லாந்தில் சுற்­றுப்­ப­யணம் மேற்­கொண்டு விளை­யாடி வரு­கி­ன்றது. 5 டெஸ்ட் போட்­டிகள் கொண்ட தொடரில் எந்­த­வித போராட்­டமும் இல்­லாமல் இந்­திய வீரர்கள் சர­ண­டைந்­தமையினால்  கடும் விமர்­ச­னத்­துக்கு உள்­ளா­னார்கள். 

முன்னாள் வீரர்கள் இந்­திய அணி மீது கடு­மை­யாக பாய்ந்­தனர். இதே­போன்று ரசி­கர்­களும் கடும் அதி­ருப்­தி­ய­டைந்­தனர். மோச­மான தோல்வி தொடர்­பாக அணித் தலைவர் விராட் கோஹ்லி, பயிற்­சி­யாளர் ரவி­ சாஸ்­திரி ஆகி­யோ­ரிடம் விளக்கம் கேட்க கிரிக்கெட் சபை திட்­ட­மிட்­டுள்­ளது.

இங்­கி­லாந்து புறப்­பட்டுச் செல்லும் முன்பு ரவி­ சாஸ்­தி­ரியும் கோஹ்­லியும், "எந்தக் களத்­தையும், எந்த அணி­யையும் சந்­திப்போம். தயக்கமில்லை" என்று தெரி­வித்­தி­ருந்­தனர்.  

தற்­போது ஏற்­பட்ட மோச­மான தோல்வி கார­ண­மாக விராட் கோஹ்லி ரசி­கர்­க­ளிடம் மன்­னிப்புக் கோரியுள்ளார். தங்கள் மீதான நம்­பிக்­கையை ரசி­கர்கள் இழக்க வேண்டாம். நாங்கள் உங்கள் மீது நம்­பிக்­கை­யுடன் இருக்­கிறோம் என்று கோஹ்லி கூறி­யுள்ளார்.