பிரித்தானியா, ஜேர்மன், பிரான்ஸ் ஆகிய நாடு­களில் சுற்­றுலா பய­ணிகள் மத்­தியில் இலங்­கையை கவரக் கூடிய கிரா­ம­மாக மேம்­ப­டுத்­து­வ­தற்­காக டிஜிட்டல் பிர­சார வேலைத்­திட்டம் ஒன்று மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளது. இதற்கு அமைச்­ச­ரவை அங்­கீகாரம் கிடைத்­துள்­ளது. 

இதற்­க­மை­வாக இந்த ஒவ்­வொரு நாடு­க­ளிலும் விசேட டிஜிட்டல் பிர­சார வேலைத்­திட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்­காக அர­சாங்­கத்தின் கொள்­வ­னவு செயற்­பா­டு­களின்  கீழான  பணிகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. 

இதற்­க­மை­வாக பிரித்தானியாவில் பிர­சார வேலைத்­திட்­டத்தை  நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்­காக டிஜிட்டல் ஸ்பிரிங் லிமிட்­டெட்­டுக்கு  703 480 அமெ­ரிக்க டொலர்­களை வழங்­கவும் ஜேர்­ம­னியில் டிஜிட்டல் பிர­சார  வேலைத்­திட்­டத்தை அமுல்­ப­டுத்­து­வ­தற்­காக மீடியா கன்­சல்டன்ட் இன்­டர்­நெ­ஷனல் ஹோல்டிங்ஸ் ஏஜி என்ற நிறு­வ­னத்­து­க்கு 697 770.92 அமெ­ரிக்க டொலர்­களை  வழங்­கு­வ­தற்கும் பிரான்ஸில்  டிஜிட்டல் பிர­சார வேலைத் திட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு இன்­டர்பேஸ் டுவ­ரிசம் என்ற நிறு­வ­னத்­துக்கு  706 460 அமெ­ரிக்க டொலர்­களை  வழங்­கு­வ­தற்கும்   தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. 

இது  தொட­ர்பில் சுற்­றுலா தொழிற்­றுறை அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ மத அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க சமர்ப் பித்த ஆவணத்துக்கு  அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.