(நா. தினுஷா)

அரசாங்கத்தின் பங்காளர்களாக சிறுகட்சிகள் செயற்படுவதனாலேயே அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில் காலந்தாழ்த்தி வருகின்றது என நீதியனதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின் (கெபே) தலைவர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தேர்தலை காலத்துக்கு காலம் நடத்துவது ஜனநாயக கோட்பாடுகளில் ஒன்றாக காணப்படுகின்றது. ஆனால் தேசிய அரசாங்கம் இந்த விடயத்தில் தவறிழைத்து வருவதுடன் சிறு கட்சிகளும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு துணைப்புரிந்துகின்றது.

சிறுக்கட்சிகள் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்தால் மாத்திரமே பதவி காலம் முடிவடைந்துள்ள  ஆறு மாகாண சபைகளுக்குமான தேர்தலை எதிர்வரும் ஜனவரி மாதத்திலாவது நடத்த முடியும். எனவே அரசாங்கத்தின் நியாயமற்ற தீர்மானங்களுக்கு ஏனைய சிறு கட்சிகள் துணைப்போக கூடாது.  மாகாணசபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கான அழுத்தத்தை சிறுகட்சிகளே அரசாங்கத்திற்கு  கொடுக்க வேண்டும் என்றார்.