தோல் பாதிப்புக்குறிய சிறந்த சிகிச்சை முறை  “கான்டாக்ட் டெர்மடைட்டிஸ்“  என வைத்தியர்கள் கூறுகின்றனர்.

வீதியில் செல்வோர், அலுவலகத்தில் பணியாற்றுவோர், வீட்டில் ஓய்வில் இருப்பவர்கள் என யாராக இருந்தாலும் தங்களின் உடலில் பல பகுதிகளில் சொறிந்து கொள்வதைப் பார்க்க முடியும். தோலில் ஏற்பட்ட பாதிப்பால், அவர்கள் அதிலிருந்து நிவாரணம் பெற அல்லது அதிலிருந்து தப்பிக்க சொறிய தொடங்குகிறார்கள்.

குறித்த நிலையில் தோல் பாதிக்கப்படுவதற்கு என்ன காரணங்கள் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டும். தோல் பாதிக்கப்படுவதற்கு புறகாரணிகளும் உண்டு. அகக்காரணிகளும் உண்டு.


சவக்காரம், குங்குமம், நகப்பூச்சு, முகப்பவுடர், ஃபேர்னஸ் கிறீம், தலைக்கு பூசும் சாயம் போன்ற அழகு சாதனப் பொருட்களாலும், சில வகையினதான ஆடைகளாலும் சிலருக்கு ஒவ்வாமை ஏற்பட்டு தோல் பாதிக்கப்படுகிறது.

அதே போல் வேறு சிலருக்கு அவர்கள் அணியும் காலணி, கால் உறை, வண்ணப்பூச்சு, இரசாயனப் பொருட்கள், தங்க நகை, கவரிங் நகை போன்றவற்றாலும் ஒவ்வாமை ஏற்பட்டு தோல் பாதிக்கப்படுகிறது.

இந்நிலையில் எம்முடைய இல்லத்தரசிகள் துணிகளை துவைப்பதற்காக பயன்படுத்தப்படும் சவக்காரத்தூள் அல்லது சவக்கார கட்டியை பயன்படுத்துவதால் ஒவ்வாமை ஏற்பட்டு அவர்களின் கை பகுதிகளில் தோல் பாதிக்கப்படுகிறது.

இதைத்தான் கான்டாக்ட் டெர்மடைடிஸ் என்று வைத்தியர்கள் குறிப்பிடுகிறார்கள். இத்தகைய பாதிப்பு ஏற்பட்டவுடன் முதலில் அங்கு சிவக்கும், பிறகு சொறிந்து சொறிந்து புண்ணாக்கி, தோல் தடிமனாகிவிடும்.

பிறகு சொரசொரப்பாகி கறுப்பாகவும் மாறிவிடும். பிறகு அந்த இடங்களையும் நாம் சொறியத் தொடங்கினார், அங்கு நீர்க்கொப்புளங்கள் ஏற்பட்டு தோல் உரியத் தொடங்குகிறது.

பொதுவாக ஒவ்வாமை என்பது புறக்காரணிகளால் மட்டும் வருவதில்லை. குளிர் காலம், கோடை காலம் போன்ற கால நிலை மாறும் போதும், மனதில் இனம் புரியா சோகம் சூழ்ந்தாலும் ஒவ்வாமை ஏற்படும்.

இந்நிலையில் இதற்கு உடனடியாக வைத்தியர்களிடம் சென்றால் உங்களுக்கு ஒவ்வாமை தரும் விடயங்களையோ அல்லது பொருள்களையே துல்லியமாக இனம் கண்டறிந்து சொல்வார். அதன் பின்னர் அதனை பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும். கட்டாயம் பயன்படுத்திதான் ஆகவேண்டும் என்றால் அதற்குரிய முன்னேற்பாடுடன் அதனை பயன்படுத்தவேண்டும். அதே சமயத்தில் வைத்தியர்கள் சொன்ன மருந்துகளையும் எடுக்கவேண்டும்.