நடந்து முடிந்த பாரா­ளு­மன்ற தேர்­தலில் போட்­டி­யிட்ட வேட்­பா­ளர் கள் தமது சொத்து விப­ரங்­களை மார்ச் 31 ஆம் திக­திக்கு முன்னர் சமர்ப்­பிக்­கா­விடின் அவர்­க­ளுக்கு எதி­ராக வழக்கு தாக்கல் செய்­யப்­ப டும் என தேர்­தல்கள் ஆணைக்­கு­ழு வின் தலைவர் மஹிந்த தேசப்­பி­ரிய தெரி­வித்தார்.

அத்­துடன் சொத்து விப­ரங்­களை சமர்ப்­பிக்­காத வேட்­பா­ளர்­களின் பிர ­ஜா­வு­ரிமையை தடை­செய்யும் வகை ­யி­லான சட்­டத்­தி­ருத்தம் செய்­வ­தற்கு திட்­ட­மிட்­டுள்­ள­தா­கவும் அவர் குறிப்­பிட்டார்.

இரா­ஜ­கி­ரி­யவில் அமைந்­துள்ள தேர்தல் செய­ல­கத்தில் நேற்று நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் கலந்­து­கொண்டு கருத்து வெளியி­டு­கை­யிலேயே அவர் மேற்ண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

நடந்து முடிந்த பாரா­ளு­மன்ற தேர்­ தலில் போட்­டி­யிட்ட வேட்­பா­ளர் கள் சிலர் இது­வ­ரைக்கும் தமது சொத்து விப­ரங்­களை சமர்ப்­பிக்­க­வி ல்லை. இதன்­படி நடந்து முடிந்த பாரா­ளு­மன்ற தேர்­தலில் போட்­டி­யிட்ட வேட்­பா­ளர்கள் தமது சொத்து விப­ரங்­களை மார்ச் 31 ஆம் திக­திக்கு முன்னர் சமர்ப்­பிக்­கா­விடின் அவர்­க­ளுக்கு எதி­ராக வழக்கு தாக்கல் செய்­யப்­படும்.

தற்­போ­தைக்கு சொத்து விப­ரங்­களை சமர்ப்­பிக்­கா­த­வர்­க­ளுக்கு வழ க்கு தாக்கல் செய்­த­மைக்கு 100 ரூபாவே தண்­டப்­ப­ண­மாக அறவி­டப்­ப­டு­கின்­றது. எனினும் சொத்து விபரங்களை சமர்ப்பிக்காத வேட்பா ளர்களின் பிரஜாவுரிமையை தடை செய்யும் வகையிலான சட்டத்திருத் தம் செய்யவதற்கு திட்டமிட்டுள் ளோம் என்றார்.