மடு திருவிழாவில் 6 இலட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்பு 

Published By: Vishnu

15 Aug, 2018 | 01:24 PM
image

மடு திருத்தலத்தின் ஆவணித் திருவிழாவில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அரசியல் பிரமுகர்களுடன் ஆறு இலட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கலந்துகொண்டனர். 

மடு திருத்தலத்தின் வருடாந்த ஆவணி மாத திருவிழா கடந்த 6 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது. இதனைத் தொடர்ந்து இன்று புதன் கிழமை காலை 6.30 மணியளவில் கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுப்பட்டது.

கொழும்பு மறைமாவட்ட பேராயர் கருதினால் மல்கம் றஞ்சித் ஆண்டகை தலைமையில் மன்னார் மறைமாவட்ட ஆயர் லயனல் இம்மானுவல் பெர்னாண்டோ ஆண்டகை, அனுராதபுரம் மறைமாவட்ட ஆயர் நோபட் அன்றாடி ஆண்டகை, குருநாகல் மறைமாவட்ட ஆயர் கெரல்ட் அன்ரனி பெர்னாண்டோ , காலி மறைமாவட்ட ஆயர் றேமன் விக்கிரமசிங்க , கொழும்பு உயர் மறைமாவட்ட துணை ஆயர் மெக்சல் சில்வா ஆண்டகை ஆகியோர் இணைந்து திருநாள் திருப்பலியை கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுத்தனர்.

திருவிழா திருப்பலியை தொடர்ந்து திருச்சொரூப பவணியும், திருச் சொரூப ஆசியும் வழங்கப்பட்டது. மடு திருத்தளத்தின் பரிபாலகர் அருட்தந்தை எஸ்.எமிலியானுஸ் பிள்ளை, குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள் உள்ளடங்களாக போது மடு அன்னையின் ஆவணித் திருவிழாவில் கலந்து கொள்ளுவதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவர் செல்வம் அடைக்கலநாதன்,பாராளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன்,ரவி கருநாநாயக்க உற்பட அரசியல் பிரமுகர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், நீதிபதிகள், வைத்தியர்கள் ஆகியோரும் கலந்துகொண்டதோடு நாட்டின் பல பாகங்களில் இருந்தும் சுமார் 6 இலட்சத்திற்கு அதிகமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் மடு அன்னையின் ஆவணித் திருவிழாவிற்காக கிறிஸ்தவ அமைச்சினால் வழங்கப்பட்ட நிதி உதவியினை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க  மன்னார் ஆயரிடம் கையளித்தார்.

இதேவேளை மடு திருத்தலத்தின் புதிய பரிபாலகராக அருட்தந்தை பொப்பி சோசை அடிகளார் நியமிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவல் பெர்னாண்டோ ஆண்டகை மக்கள் மத்தியில் அறிவிப்பை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து நவநாள் ஆராதனைகள் இடம் பெற்று வந்தது. நேற்று செவ்வாய்க்கிழமை மாலை வேஸ்பர் ஆராதனை ஒப்புக்கொடுக்கப்பட்டதைத் தொடர்ந்து இன்று  புதன்கிழமை காலை 6.30 மணிக்கு திருவிழா திருப்பலி கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-18 14:17:05
news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42