பெண்களின் முன்னேற்றத்திற்காக நடிகை ஜோதிகா பத்து கட்டளைகளை தான் நடித்து வரும் காற்றின் மொழி என்ற படத்தில் வலியுறுத்தியிருக்கிறார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பில்,‘ காற்றின் மொழி, எனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்றாகி விட்டது. அதனால் தான் நானே வசனங்கள் அதிகம் உள்ள இப்படத்திற்கு டப்பிங் செய்து வருகிறேன். 

பெண்கள் சுயமாக சம்பாதித்து, தங்கள் வாழ்க்கையை தங்களுக்கு பிடித்த படி வாழ வேண்டும் என்றும், அதற்கு அவர்கள் குடும்பத்தினரும் ஆதரவு தர வேண்டும் என்ற கருத்தை ‘காற்றின் மொழி’ வலியுறுத்துகிறது.

1. உன் விருப்பம் போல் உடை உடுத்துவாயாக.

2. நீ விரும்புவதை செய்வாயாக.

3. உன் கணவன் உன்னை ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டாதிருப்பாயாக.

4. பசித்தால் முதலில் நீயே சாப்பிடுவாயாக.

5. குண்டாய் இருக்க விரும்பினால் குண்டாய் இருப்பாயாக.

6. வீட்டு பணிகளில் உன் கணவனையும் பங்கெடுக்க செய்வாயாக.

7. நீ சம்பாதித்து உன் விருப்பம் போல் செலவு செய்வாயாக.

8. உன் மனம் மறுப்பதை, ஏற்காதிருப்பாயாக 

9. ஆணும் பெண்ணும் சரி சமம் என்பதை அறிவாயாக.

10. மனதில் பட்டத்தை சொல்வாயாக.

இத்தகைய பெண்களின் மேம்பாட்டிற்கு வழி காட்டும் பத்து கட்டளைகளை உள்ளடக்கிய ஒரு போஸ்டர் வடிவமைப்பு  காற்றின் மொழி படத்திற்கு உருவாக்கியது எனக்கு பிடித்து இருந்தது. என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மானின் உறவினராக ஏ ஹெச் காசீப் இசையமைத்திருக்கும் இந்த படத்தை ராதா மோகன் இயக்கியிருக்கிறார். விரைவில் இப்படத்தின் டீஸர் மற்றும் சிங்கிள் ட்ரெக் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.