நாட்டின் அபி­வி­ருத்தி திட்­டங்­க­ளுக்­கென நிதியை வழங்­கு­வ­தற்கு மத்­திய வங்கி எந்­நே­ரத்­திலும் தயா­ரா­க­வுள்­ளது. ஆனால் குறித்த நிதி சாதா­ரண மக்­களின் நல­னுக்­காக எந்­த­ளவு தூரம் சென்­ற­டை­கின்­றது என்­பதில் சந்­தேகம் நில­வு­வ­தாக மத்­திய வங்கி ஆளுநர் அர்­ஜுன மகேந்­திரன் தெரி­வித்தார்.

மேலும், பல்­தே­சிய கம்­ப­னி­களில் காணப்­படும் வர்த்­தக பொறி­மு­றை­களை விருத்தி செய்­வதால் மட்டும் நாட்டின் மொத்த தேசிய உற்­பத்­திக்­கான இலக்­கு­களை அடைய முடி­யாது. சிறு மற்றும் நடுத்­தர முயற்­சி­யா­ளர்­களை பாது­காப்­ப­தற்­கான சமூக மீள்­கட்­டு­மான பொறி­மு­றைகள் புதி­தாக உரு­வாக்­கப்­பட்டால் மட்­டுமே நிலைத்­தகு இலக்­கு­களை அடைய முடியும் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

சிறிய மற்றும் நடுத்­தர நிறு­வ­னங்­களின் வர்த்­தக பங்­க­ளிப்பை மேம்­ப­டுத்­த­வ­தற்­கான புதிய கொள்­கைத்­திட்­டங்­களை உரு­வாக்­கு­வ­தற்­கான தேசிய கலந்­து­ரை­யாடல் மத்­திய வங்­கியின் தலைமை செய­ல­கத்தில் நேற்று முன்­தினம் இடம்­பெற்­றது. இதில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.

அவர் அங்கு தொடர்ந்து உரை­யாற்­று­கையில், கடந்த 30 வரு­டங்­க­ளுக்கும் மேலாக இலங்­கையில் நில­விய யுத்தம், பொரு­ளா­தார ஸ்திரத்­தன்­மை­யின்மை போன்­றன இன்று இல்­லா­தொ­ழிக்­கப்­பட்­டுள்­ளன. இந்­நே­ரத்தில் அபி­வி­ருத்தி செயற்­பா­டு­களை முன்­னெ­டுப்­ப­தற்­கான சகல வேலைத்­திட்­டங்­க­ளையும் செயற்­ப­டுத்­து­வ­தற்கு தகுந்த காலம் தோன்­றி­யுள்­ளது. குறித்த அபி­வி­ருத்தி செய்­ற­பா­டு­க­ளுக்கு மத்­திய வங்கி நிதி உத­வி­களை எந்நேரத்­திலும் வழங்க தயா­ரா­க­வுள்­ளது.

இலங்­கையின் மொத்த தேசிய உற்­பத்தி மாவட்ட ரீதி­யிலும் பிர­தேச ரீதி­யிலும் வேறு­பா­டு­களை காட்­டு­கின்­றது. நகர்ப்­பு­றங்­களில் காணப்­படும் மக்­களின் பொரு­ளா­தார விருத்தி செயற்­பா­டுகள் கிரா­மப்­பு­றங்­களில் காணப்­ப­டு­வ­தில்லை. தற்­போ­துள்ள தேசிய அர­சாங்­கத்தில் உள்ள அனைத்து அமைச்­சுக்­க­ளுக்­கு­மான நிதி மத்­திய வங்­கி­யி­னூ­டா­கவே பகி­ரப்­ப­டு­கின்­றது. ஆனால் குறித்த நிதி­யினை சாதா­ரண மக்­க­ளுக்கு பய­ன­ளிக்க கூடிய வகையில் கொண்­டு­செல்லும் செயற்­பாட்டில் பிராந்­தி­யங்­களில் உள்ள வங்­கி­களின் பொறுப்­பு­ணர்­வின்மை மற்றும் இடைச்­செ­யற்­பாட்­டா­ளர்­க­ளுக்­கி­டை­யி­லான போட்டி என்­பன சாதா­ரண மற்றும் நடுத்­தர தொழில் முயற்­சி­யா­ளர்­களை பெரு­ம­ளவில் பாதிக்­கின்­றது.

குறித்த சமத்­து­வ­மற்ற தன்மை பல்­தே­சிய கம்­ப­னி­க­ளிலோ அல்­லது பாரிய முத­லீட்டு கம்­ப­னி­க­ளிலோ காணப்­ப­டு­வ­தில்லை. காரணம் நிதி ஒதுக்­கீட்டு இலாபம் முழு­வதும் குறித்த முயற்­சி­யா­ளர்­களை சென்­ற­டை­கின்­றது. இதுவே பிர­தேச ரீதி­யி­லான பாகு­பா­டு­க­ளுக்கு காரணங்­க­ளாக அமைந்­துள்­ளன.

நாம் குறித்த வரை­ய­றைக்குள் மட்டும் இருந்து செயற்­பட முடி­யாது. நிலை­யான அபி­வி­ருத்தி தகுந்த வகை­யி­லான புதிய மூலோ­பாய திட்­டங்கள் உரு­வாக்­கப்­பட வேண்டும். மேலும் சிறு முயற்­சி­யா­ளர்­களை பாது­காப்­ப­தற்­கான சமூக மீள்­கட்­டு­மான பொறி­மு­றைகள் புதி­தாக உரு­வாக்­கப்­பட்டால் மட்­டுமே நிலைத்­தகு இலக்­கு­களை அடைய முடியும். அதற்­கான நிதி ஒதுக்­கீ­டு­களை வழங்க மத்­திய வங்கி எந்­நே­ரத்­திலும் தயா­ரா­க­வுள்­ளது.

தற்­போது தனியார் வங்­கி­களின் செயற்­பா­டுகள் மிகவும் செயற்­றிறன் கொண்­ட­தாக அமைந்­துள்­ளன. புதிய கம்­ப­னிகள் பதி­விற்­கென நாளாந்தம் பல விண்­ணப்­பங்­கள் கிடைக்­கப்­பெ­று­கின்­றன. ஆனால்

சிறு முயற்­சி­யா­ளர்­க­ளுக்­கான பிர­வே­சத்தின் வீழ்ச்சி நிலை இலங்கை வர்த்­தக சந்­தையை பாதிப்­புக்­குள்­ளாக்கும் என்­பதில் எவ்­வி­த­மான சந்­தே­கமும் இல்லை.

எனவே சாதா­ரண மக்­க­ளுக்கு பய­ன­ளிக்கும் வகை­யி­லான வர்­த­்தக செயன்­ மு­றை உருவாக்கப்படுவது அவசியம் என்றார்.