யுத்தத்தில் வெற்றியை பெற்றுத்தந்த படைவீரர்களை சர்வதேச நீதிமன்றங்களின் முன்னாள் நிறுத்தப்போவதில்லை என நீதியமைச்சர் தலதா அத்துக்கோரள தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையில் இதனை தெரிவித்துள்ள அவர் சில தரப்பினர் யுத்தத்தை வெற்றிகொண்டவர்களை சர்வதேச நீதிமன்றங்களின் முன்னிலையிலும் மின்சார கதிரைகளிற்கும் கொண்டு செல்வதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாக போலியான தகவல்களை வெளியிட்டு வருகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.

2002 இல் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை  இலங்கை அங்கீகரிக்கவேண்டும் என யோசனை முன்வைக்கப்பட்டபோதிலும் பிரதமர் அதில் கைச்சாத்திடவில்லை என நீதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை இலங்கை அங்கீகரித்திருந்தால் சர்வதேச நீதிமன்றங்களில் இலங்கை தொடர்பான வழக்குகள் விசாரிக்கப்பட்டிருக்கும் யுத்த வீரர்கள் யுத்த குற்றவாளிகள் என முத்திரைகுத்தப்பட்டு சர்வதேச நீதிமன்றத்தின் கீழ் நிறுத்தப்பட்டிருப்பர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.