அட்டன் பகுதியில் கஞ்சாவுடன் 4 சிறுவர்கள்  இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு நகரிற்கு தொழில்புரிய செல்லவிருந்த நிலையில் குறித்த சந்தேக நபர்களான 4 சிறுவர்களும் அட்டன் பஸ் நிலையத்திற்கு அருகாமையில் வைத்து இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த விசேட தகவலையடுத்தே குறித்த சந்தேக நபர்கள் நான்கு பேரையும் விசாரணைக்குட்படுத்தும் போது நான்கு பேரிடமும் கஞ்சா இருந்தது தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து கஞ்சா பக்கட்கள் நான்கினை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை அட்டன் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து அட்டன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.