சிறிய தும்பியானது தனக்குரிய காதல் துணையைத் தேடுவதற்காக கண்டங்களுக்கிடையே 4,400 மைல்கள் தூரம் பயணிப்பதாக புதிய ஆய்வொன்று கூறுகிறது.

அமெரிக்க ருத்ஜெர்ஸ் பல்கலைக்கழகத்தால் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தும்பிகளின் மரபணுக்களை ஆய்வுக்கு உட்படுத்திய ஆய்வாளர்கள் ,ஒன்றரை அங்குல நீளம் மட்டுமே கொண்ட மேற்படி தும்பிகள் தமக்குப் பொருத்தமான துணையொன்றைத் தேடிக் கண்டுபிடிக்கும் வரை வட அமெரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் ஆசிய பிராந்தியங்களுக்கிடையே நெடுந்தூரப் பயணத்தை மேற்கொள்வதாக கூறுகின்றனர்.

அமெரிக்க டெக்ஸாஸ் மாநிலம், தென் அமெரிக்கா, கிழக்கு கனடா, ஜப்பான், கொரியா மற்றும் ,இந்திய பிராந்தியங்களில் காணப்படும் தும்பிகளை ஆய்வுக்குட்படுத்திய போது அவை மரபணு ரீதியில் ஒரே சந்ததிக்குரியவையாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.