(ஆர்.விதுஷா றோஜனா )

குருநாகல் பஸ் தரிப்பிடத்தில், பெண்ணொருவரின் தங்கச் சங்கிலியை அபகரித்த ஒருவரை குருநாகல் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

குறித்த நபர் பெண்ணின் தங்கச் சங்கிலியை அபகரித்துவிட்டு தப்பியோட முயற்சித்த வேளையில் பஸ் தரிப்பிட பகுதியிலிருந்த போக்குவரத்து பொலிஸார் அவரை கைதுசெய்துள்ளதுடன் அவரிடமிருந்த தங்கச் சங்கிலியையும் மீட்டுள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் சேறுவெல பகுதியைச் சேர்ந்தவர் என ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.