(எம்.மனோசித்ரா)

இலங்கை தனியார் போக்குவரத்து சங்கத்தினர் நாளை நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தனியார் போக்குவரத்து சங்கத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து குற்றங்களுக்கான தண்டப்பணம் நூற்றுக்கு 35 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளமை மற்றும் தனியார் பஸ் சேவையாளர்களுக்கு இலவச சீருடை வழங்கப்படாமை உள்ளிட்ட விடயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர்.

இதற்கிணங்க தனியார் போக்குவரத்து சங்கத்தினர் நாளைமறுதினம் கொழும்பு பெஸ்டியன் மாவத்தையில் ஆர்ப்பாட்டமொன்றையும் முன்னெடுக்கவுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தனியார் பஸ் சேவையாளர்கள், முச்சக்கரவண்டி சாரதிகள் உள்ளிட்ட தனியார் வாகன சங்கங்களின் உறுப்பினர்களும் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.