பாடலாசிரியர் வித்தக கவிஞர் பா விஜய் நடித்து தயாரித்து இயக்கியிருக்கும் ஆருத்ரா என்ற படம் ஒகஸ்ட் 24 ஆம் திகதியன்று வெளியாகிறது என்ற அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

வித்தக கவிஞர் பா விஜய் தயாரித்து நடித்து இயக்கியிருக்கும் படம் ஆருத்ரா. இந்த படத்தின் இசை வெளியிடு அண்மையில் நடைபெற்றது. அதன் போது இப்படத்தின் வெளியிடு குறித்து பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும், இரண்டொரு நாளில் அறிவிக்கப்படும் என பா விஜய் தெரிவித்திருந்தார்.

அதன்படி சிறார்களின் பாலியல் வன்முறை குறித்து அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் உருவாகியிருக்கும் ஆருத்ரா படம் இம்மாதம் 24 ஆம் திகதியன்று வெளியாகிறது.

இதில் பா விஜய், தக்ஷிதா குமாரி, மேகாலீ, சஞ்சனா சிங், யுவா, ஆகியோருடன் இயக்குநர் கே பாக்யராஜ், இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகர். பேராசிரியர் கு ஞானசம்பந்தன், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பி எல் சஞ்சய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்திருக்கிறார்.