(நா.தனுஜா)

இலங்கை, பங்களாதேஷ், நேபாளம், மலேசியா, பிரேஸில் உட்பட பல நாடுகளின் அரசாங்கங்களின் சீனா நாணயத்தாள்களை அச்சிடுகின்றது என சீன ஊடகத்தை மேற்கோள்காட்டி பி.ரி.ஐ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

சீன நாணயத்தாள்கள் அச்சிடும் கூட்டுத்தாபனத்தின் தலைவரான லுயூ குய்ஷெங் சில மாதங்களுக்கு முன்னர் சீனாவின் மத்திய வங்கியினால் மாதம் இருமுறை வெளியிடப்படும் 'சைனா பைனான்ஸ்" என்ற சஞ்சிகையில் எழுதியுள்ள கட்டுரையொன்றில், நாணயத்தாள்களை அச்சிடுவதற்காக சீனா சர்வதேச வர்த்தக கோரிக்கையை 2015ஆம் ஆண்டில் நேபாளத்திடமிருந்து பெற்றதாகவும், 50ரூபா, 100ரூபா, 1000ரூபா நாணயத்தாள்களை அச்சிடுவதற்கான கேள்விக் கோரிக்கைகளை சீனா வென்றெடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் தாய்லாந்து, பங்களாதேஷ், இலங்கை, மலேசியா, பிரேஸில், போலந்து உட்பட பல நாடுகளிலிருந்து நாணயத்தாள்களை அச்சிடுவதற்கான ஒப்பந்தத்தை சீனா வென்றெடுத்தது என்றும் லியூ தெரிவித்திருக்கிறார். 

அத்தோடு பட்டுப்பாதை திட்டம்  ஆசிய மற்றும் ஆபிரிக்க, ஐரோப்பிய நாடுகளுக்கும் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதை நோக்காகக் கொண்டுள்ளது. பட்டுப்பாதை திட்டத்தில் அறுபதிற்கும் மேற்பட்ட நாடுகள் கைச்சாத்திட்டுள்ளன. அதனூடாகவும் அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது." எனவும் குறிப்பிட்டுள்ளார்.