மாத்தளை மாவட்டத்தில் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது ஹெரோயின் போதைப் பொருளுடன் எட்டுப் பேரை கைதுசெய்துள்ளதாக மாத்தளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாத்தளை பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலுக்கிணங்க மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் மாத்தளை மற்றும் தம்புள்ளை பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என தெரிவித்த பொலிஸார் இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.