மத்திய மலை நாட்டில் ஒரு சில் பிரதேசங்களில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கன மழை காரணமாக மலையகத்தின் நீரேந்தும் பகுதிகளின் நீர் மட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

மேல் கொத்மலை, விமலசுரெந்திர, காசல்ரீ ஆகிய நீரேந்தும் பகுதிகளில்  நீர் மட்டம் அதிகரித்துள்ளமையால் இன்று குறித்த நீரேந்தும் பகுதிகளின் வான் கதவுகள் திறக்கப்பட்டன.

இதனால் குறித்த நீர்த்தேக்கப் பகுதிகளின் தாழ்வான பிரதேசத்தில் வாழ்கின்ற குடியிருப்பாளர்கள் அவதானத்துடன் இருக்குமாறு பணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.