மாத்தளை – வில்கமுவ பிரதேசத்தில் 9 வயதான பாடசாலை மாணவி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாகியுள்ளார் என்ற சந்தேகத்தின் பேரில் மாணவியின் மாமா உறவு முறை நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யபட்ட சந்தேக நபர் எப்பாவல பகுதியில் வீடுகளுக்குச் சென்று தேங்காய் வியாபாரம் செய்து வரும் வியாபாரியாவார்.

மேலும் சந்தேக நபர் குறித்த மாணவியின் மாமியை திருமணம் முடித்து சிறுமியின் வீட்டில் தங்கியிருந்து தேங்காய் வியாபாரத்தில் ஈடுபடுபவர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பாதிக்கப்பட்ட சிறுமி பொலிஸாரால் வில்கமுவ ஹெட்டிபொல வைத்தியசாலையில் வைத்திய பரிசோதனைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் ஆரம்ப கட்ட விசாரணைகளின் பின்னர் நாவுல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தபடவுள்ளார்.