கலாவெவ வனப்பிரதேசத்தில் ஆண் ஒருவரின் சடலத்தை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் இன்று கண்டெடுத்துள்ளனர்.

அனுமதியின்றி வனத்தினுள் சென்ற குறித்த நபர் காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்திருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

மீட்கப்பட்ட சடலம் சிதைந்துள்ளமையால் அடையளம் காண முடியாதுள்ளது என கல்கிரியாகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இரண்டு மூன்று தினங்களுக்கு முன்னர் இச் சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் எனவும் காட்டு மாடுகள் மற்றும் வன விலங்களை வேட்டையாடுதல் அல்லது புதையல் தோண்டல் போன்ற சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் வனத்திற்குள் அனுமதியின்றி பிரவேசிப்பதாலேயே வன விலங்குகளின் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழக்கின்றனர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் மீட்கப்பட்ட சடலத்தின் அருகில் காணப்படும் தடயங்களின் படி காட்டு யானை தாக்கியிருக்கலாம் என தாம் சந்தேகப்படுவதாக கல்கிரியாகம பொலிஸார் தெரிவித்தனர்.