சட்டவிரோதமாக ஒரு தொகை வல்லப்பட்டை மற்றும் கொதல ஹிம்புட்டுவை தாய்லாந்திற்கு கடத்திச் செல்ல முற்பட்ட இளைஞர் ஒருவரை நேற்று கட்டுநாயக்க விமான நிலைய சுங்கப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் 24 வயதான நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த இளம் வியாபாரி ஒருவராவார்.

குறித்த இளைஞரிடமிருந்து 5,75,000 ரூபா பெறுமதியான 7 கிலோ 400 கிராம் வல்லப்பட்டையும், 17 கிலோ 400 கிராம் கொதல ஹிம்புட்டுவும் கைப்பற்றப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சுங்கப் பிரவினர் மேற்கொண்டு வருவதோடு, சந்தேக நபருக்கு ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.