மாகாண சபைத் தேர்தல் புதிய சட்டத்தின் பிரகாரம் தொகுதி ரீதியாக நடைபெற்றால் வடக்கு கிழக்குக்கு வெளியே வாழ்கின்ற சிறுபான்மை மக்களுக்கு பெரும் ஆபத்தாக அமையும் என பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

மாகாண சபை தேர்தல்களை எக் காரணம் கொண்டும் சிறுபான்மை கட்சிகள் புதிய தேர்தல் முறைப்படி நடத்துவதற்கு இடமளிக்க கூடாது. 

எனெனில் வடகிழக்கு தவிர்ந்த ஏனைய பகுதிகளில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற சிறுபான்மை தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் மலையக தமிழர்கள் தமக்கென்று ஒரு பிரதிநிதியை பெற்றுக் கொள்ள முடியாது போகும் தேர்தல் முறைமையே இதுவாகும். 

சிறுபான்மையினார் மீது அரசியல் ரீதியாக அநியாயத்தை செய்துவிடக்கூடாது என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கின்றோம். இது போன்ற சட்டமூலம் இன்னுமொருமுறை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படுமாகவிருந்தால் எதிர்காலத்தில் சிறுபான்மைக் கட்சிகளினால் அது தோற்க்கடிக்கப்படும் என்றார்.