சீரற்ற காலநிலையினால் 46 குடும்பங்கள் தற்காலிக முகாம்களில்

Published By: Digital Desk 4

14 Aug, 2018 | 09:46 AM
image

மலையகத்தில் கடந்த சில நாட்களாக ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையில் ஹட்டன் மற்றும் நுவரெலியா பகுதிகளில் 46 குடும்பங்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்டத்திற்கு பொறுப்பான இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அந்தவைகயில் அம்பகமுவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஹட்டன் டிக்கோயா எட்லி தோட்டத்தில் 37 குடும்பங்களை சேர்ந்த 167 பேர் மண்சரிவு அபாயம் காரணமாக எட்லி தோட்ட தமிழ் வித்தியாலயத்தில் தற்காலிகமாக பாதுகாப்பு கருதி தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, நுவரெலியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட நானுஓயா டெஸ்போட் கீழ்பிரிவு தோட்டத்தில் நேற்று மாலை இடம்பெற்ற மண்சரிவு காரணமாக அத்தோட்டத்தின் 13 ஆம் இலக்க தொடர் குடியிருப்பில் வாழும் 9 குடும்பங்களை சேர்ந்த 29 பேர் இடம்பெயர்ந்து எபஸ்போட் பாடசாலையில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ந்து இடைக்கிடையே பெய்து வரும் கனமழை காரணமாக அம்பகமுவ, கொத்மலை, நுவரெலியா போன்ற பிரதேசங்களில் மண்சரிவுகள், வீதி விபத்துகள் என இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடதக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53