தலதா மாளிகை எசல பெரஹராவிற்கு 100 மில்லியன் ரூபா

By T Yuwaraj

13 Aug, 2018 | 07:30 PM
image

கண்டி ஸ்ரீ தலதா மாளிகை மற்றும் நான்கு தேவாலயங்களின் சரித்திரப் புகழ்மிக்க எசல பெரஹராவிற்கு சுமார் 100 மில்லியன் ரூபா செலவிடப்பட உள்ளதாகவும் 80 ற்கும் மேற்பட்ட நடனக் குழுக்களை ஈடுபடுத்த உள்ளதாகவும் ஸ்ரீ தலதா மாளிகையின் தியவடன நிலமே பிரதீப் நிலங்க தேல தெரிவித்தார்.

கண்டி பெரஹரா தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு தெரிவிக்கையிலே இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில் 

பெரஹரா இடம்பெறும் புனித பூமியின் சுற்றாடலை மாசு படுத்தாமலும் புனித பூமிக்குறிய உடைகளுடன் பக்தர்கள் சமூகமளிப்பதுமே எமக்குச் செய்யக் கூடிய பேருதவியாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் பாரம் பரிய பெரஹரா என்பது யானைகளைக் கொண்டதாக இருக்க வேண்டும். எப்போதும் யானைகள் இல்லை என்று கூறுவது வழக்கமாகி விட்டது. தலதா மாளிகையை பொருத்தவரை 12 யானைகள் மட்டுமே உள்ளன. ஏனைய தேவாலயங்களான கதிர்காம தேவாலயத்திற்கு ஒரு யானையும் விஷ்ணு தேவாயலத்திற்கு ஒரு யானையும், கயான் ஹீன்கெந்த திவமேயிற்கு ஒரு யானையுமாக 15 யானைகள் மட்டுமே கண்டியில் உள்ளன. 

எனவே இயன்றளவு பழக்கப்பட்ட யானைகளை வளர்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார். அப்படி அல்லாத பட்சத்தில் யானைகள் போதியளவு இல்லை என்பது வழக்கமான ஒரு விடயமாக மாறிவிடும் என்றும் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right