எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறத்து தீர்க்கமான முடிவினை எடுக்கும் நோக்கில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் கூட்டு எதிரணியினர் நாளை விசேட சந்திப்போன்றை மேற்கொள்ளவுள்ளனர்.

இந்த சந்திப்பானது மஹிந்த ராஜபக்ஷவின் கொழும்பிலுள்ள உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நடைபெறவுள்ளது.

இதன்போது சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை குறித்தும் கவனம் செலுத்தப்படவுள்ளதுடன் கூட்டு எதிர்க்கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் சம்பந்தமாக முக்கிய கவனம் செலுத்தப்படவுமுள்ளது. 

மேலும் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஐந்தாம் திகதி கூட்டு எதிர்க்கட்சி கொழும்பில் நடத்தவுள்ள அரசாங்கத்திற்கு எதிரான பேரணி குறித்தும் இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்படவுள்ளது.