கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற அதிவேக புகையிரதம்  கச்சேரியிலிருந்து யாழ்.நகர் நோக்கி சென்ற காரை மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர்.

சம்பவத்தில் பொறியியலாளரான எஸ்.சுதாகரன் (வயது41) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மேலும் ஆதவன் (வயது28), அரவிந்தன் (வயது28), கம்பதாஸன் (வயது23)  என்ற மூவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.