(இரோஷா வேலு)

மத்துகமை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மணிக்கொட பகுதியில் காரில் பயணித்திருக்கொண்டிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தி ஒருவரை கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய மூவரை கைதுசெய்துள்ளதாக மத்துகமை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 6 ஆம் திகதி யடதொல - அளுத்கம வீதியில் மணிக்கொட பகுதியில் சூதாட்ட கும்பலொன்று காரில் பயணித்துக் கொண்டிருந்தபோது வேனில் வந்த முகமூடி அணிந்த கும்பல் அவர்கள் மீது மேற்கொண்ட தாக்குதலினால் மூவர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக வாவத்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதன் பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மூவரில் பனிகல குருளுபத்த பகுதிதயைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்த மதுகம குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மூவரை மதுகமை பகுதியில் வைத்து கடந்த 11 ஆம் திகதி கைதுசெய்தனர். 

நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களை மதுகமை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது நீதிவான் அவர்கள‍ை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.