தேயிலை உற்பத்தியினூடாக தோட்டக் கம்பனிகள் பெறும் இலாபத்தின் பெரும் பகுதியை தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என அமைச்சர் நவீன் திஸாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.

இந்தியா அரசாங்கத்தின் நிதி உதவியினூடாக பூண்டுலோயா டன்சினன் தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள மகாத்மா காந்தி புரம் கிராமத்தை பயனாளிகளுக்கு கையளிக்கும் நிகழ்வில் அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த நாட்டில் 150 வருட மேலாக தேயிலைக்கு உரம் கொடுத்து வாழும் தோட்ட தொழிலாளர்களை முன்னேற்றவும், தேயிலை தொழிலை முன்னேற்றவும் எதிர்காலத்தில் பல திட்டங்களை கொண்டு வரவுள்ளோம்.

இந்த மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக சகல நடவடிக்கைகளையும் நாம் மேற்கொள்ளவுள்ளோம். இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு தேயிலை விலை குறைந்து காணப்பட்டது. தற்போது தேயிலையின் விலை உயர்வு கண்டுள்ளது.

எனவே கூடிய விரைவில் இந்த மக்களுக்கு எவ்வித பாகுபாடும் பாராது இவர்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கான திட்டங்களை எமது அமைச்சினூடாக முன்னெடுப்போம் என்றார்.