நீதிமன்றத்தை அவமதித்த சம்பவம் தொடர்பில் ஆறு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வரும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு வைத்தியர்களால் பரிந்துரைக்கப்பட்டுள்ள அறுவைச் சிகிச்சை இன்று இடம்பெறவுள்ளது.

சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஞானசார தேரர், சிறைச்சாலை மற்றும் பொலிஸாரின் பாதுகாப்பின் கீழ் மேற்குறிப்பிடப்பட்ட வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.