இலங்கையின் முன்னணி சீமெந்து உற்பத்தியாளரான INSEE சீமெந்து, இலங்கையின் முதற்தர பொறியியல் நிபுணத்துவ அமைப்பான இலங்கை பொறியியலாளர் சங்கத்துடன் (IESL) இணைந்து INSEE-IESL கொங்கிறீட் சவால் 2018 ஐ அறிமுகம் செய்திருந்தன. 

அறிவு பகிர்வு மற்றும் அனுபவசார், புத்தாக்கம்-அடிப்படையிலான பயிலல் ஆகியவற்றை ஊக்குவித்து அவற்றில் முதலீடு செய்வதனூடாக, இலங்கை முழுவதிலும் பிரகாசமான எதிர்காலத்தை கட்டியெழுப்பும் நிறுவனத்தின் நோக்கத்துக்கு வலுச் சேர்த்திடும் வகையில் இந்த திட்டம் அமைந்துள்ளது.

இந்த போட்டி 5 ஆவது தடவையாக முன்னெடுக்கப்படுவதுடன், மொறட்டுவை, பேராதனை, ருஹுண, யாழ்ப்பாணம், தென் கிழக்கு மற்றும் இலங்கை திறந்த பல்கலைக்கழகம் போன்ற அரச பல்கலைக்கழகங்களில் இறுதி ஆண்டில் பயிலும் சிவில் பொறியியல் பீட மாணவர்களுக்கு பங்கேற்கக்கூடிய வகையில் இந்த போட்டி அமைந்துள்ளது.

இந்த ஆண்டின் தொனிப்பொருளாக INSEE எக்ஸ்டரா உடன் “நிலைபேறான நிர்மாணத்துக்கான சுய கெட்டிப்பான கொங்கிறீற்” (‘Self Compacting Concrete for Sustainable Construction’ with INSEE Extra) என்பது அமைந்திருந்தது. உள்ளக போட்டிகளினூடாக ஐந்து பேரைக் கொண்ட மூன்று அணிகள் ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலிருந்தும் தெரிவு செய்யப்பட்டு இறுதிப் போட்டியில் பங்கேற்பதற்கு வாய்ப்பை பெறும்.

இந்த போட்டி மூன்று மாதங்களுக்கு முன்னெடுக்கப்படும் என்பதுடன் வெற்றியாளர்கள் TECHNO ஸ்ரீ லங்கா 2018 நிகழ்வின் போது அறிவிக்கப்படுவார்கள். இலங்கையில் முன்னெடுக்கப்படும் மாபெரும் மற்றும் ஒரே பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த கண்காட்சியாக இந்த TECHNO ஸ்ரீ லங்கா 2018 நிகழ்வு அமைந்திருப்பதுடன் இதை IESLஏற்பாடு செய்கிறது. இந்த ஆண்டு இடம்பெறும் கண்காட்சியின் தொனிப்பொருளான “சூழலுக்கு நட்பான எதிர்காலத்தை பொறியமைத்தல்” (‘Engineering the Green Future’) என்பதற்கு வலுச் சேர்க்கும் வகையில் இம்முறை INSEE-IESL கொங்கிறீற் சவால் அமைந்துள்ளது.

IESL தலைவி பேராசிரியர். நிரஞ்சனி ரத்நாயக்க கருத்துத் தெரிவிக்கையில்,

 “ INSEE-IESL கொங்கிறீற் சவால் போட்டி படிப்படியாக வளர்ச்சி கண்டுள்ளதை காண்பதையிட்டு நாம் பெருமையடைகிறோம். ஐந்து ஆண்டுகள் எனும் குறுகிய காலப்பகுதியில் நாம் கடந்து வந்துள்ள பயணம் என்பது மிகவும் நீண்டதாக அமைந்துள்ளது. இலங்கையின் நிபுணத்துவம் வாய்ந்த பொறியியலாளர்களின் மேற்பார்வை அமைப்பு எனும் வகையில், IESL இனால் தொடர்ந்து அணிகளின் சுயாதீனமான மீளாய்வுகள் மற்றும் பெறுபேறுகள் அடிப்படையான மதிப்பீடுகள் போன்றன போட்டி முழுவதிலும் வழங்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் தரம் மேம்படுத்தப்பட்ட வண்ணமுள்ளதுடன், இந்த ஆண்டின் தொனிப்பொருள், நாட்டின் நிர்மாணத்துறையின் எதிர்காலத்துக்கு உறுதிமொழியை வழங்குவதாக அமைந்துள்ளது. இலங்கையின் முன்னணி சீமெந்து உற்பத்தியாளரான INSEE சீமெந்துடன் கைகோர்த்து நாம் முன்னெடுக்கும் இந்த திட்டத்தில், எமது இளம் மற்றும் புத்தாக்கமான அணிகளின் மத்தியில் ஆரோக்கியமான போட்டியை அடுத்த மூன்று மாத காலப்பகுதியில் எதிர்பார்க்கிறோம்.” என்றார்.

சர்வதேச தொழிற்துறை அபிவிருத்திகளின் அடிப்படையில்,

 INSEE சீமெந்து ஸ்ரீ லங்கா, கேள்விகள் நிறைந்த நிர்மாணத்துறையின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக புத்தாக்கமான தயாரிப்புகள் மற்றும் தீர்வுகளை வழங்கி வருகிறது. அத்துடன், புத்தாக்கம் அடிப்படையிலான ஆய்வுகள் மற்றும் பிரயோகம் ஆகியவற்றை பல்கலைக்கழகங்களின் மட்டத்தில் ஊக்குவித்த வண்ணமுள்ளது. இலங்கையில் காணப்படும் புத்தாக்க அடிப்படையிலான கல்வி வசதிகளை மேம்படுத்துவதில் INSEE முக்கியமான பங்களிப்பை வழங்கி வருகிறது.

நாட்டின் நிர்மாணத்துறையை மேம்படுத்துவதற்காக அனுசரணை மற்றும் நவீன ஆய்வுகளுக்காக நிதிஉதவிகளை பெற்றுக் கொடுப்பது போன்ற நடவடிக்கைகளுக்காக இலங்கையின் முன்னணி உள்நாட்டு பல்கலைக்கழகங்களின் பொறியியல் பீடங்களுடன் உடன்படிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

INSEE சீமெந்து ஸ்ரீ லங்காவின் நிறைவேற்று பதில் தலைவரும் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவின் பணிப்பாளருமான ஜான் குனிக் கருத்துத் தெரிவிக்கையில், 

“நாம் ஆய்வுகள் மற்றும் புத்தாக்கமான செயற்பாடுகள் போன்றவற்றினூடாக பாரம்பரிய முறைகளை சவால்களுக்கு உட்படுத்தி வருகின்ற நிலையில், கொங்கிறீற் கலவை வடிவமைப்பு போன்ற நிர்மாணத்துறையுடன் விசேடத்துவம் வாய்ந்த துறைகளில் முதலீடுகளை மேற்கொண்டு, அதனூடாக எம்முடன் கைகோர்த்து செயலாற்ற எதிர்கால தலைமுறையினரை ஊக்குவிக்கிறோம். இந்த செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக IESL உடன் கைகோர்ப்பதையிட்டு நாம் மகிழ்ச்சியடைவதுடன் இதனூடாக எம்மால் சர்வதேச ரீதியில் பின்பற்றப்படும் விசேட செயற்பாடுகளை இந்த போட்டியினூடாக ஊக்குவிக்கக்கூடியதாக இருக்கும்” என்றார்.

நிலைபேறான நவீன கால உட்கட்டமைப்புகளை கட்டியெழுப்புவதில் தொழிற்துறையை சேர்ந்த பங்காளர்களை ஈடுபடுத்தும் வகையில் நிறுவனத்தின் அர்ப்பணிப்பான புத்தாக்க மற்றும் பிரயோக (I&A)நிலையத்தைச் சேர்ந்த உயர் திறன் வாய்ந்த தொழில்நுட்ப அணியினர் புதிய சிந்தனைகளை தினசரி வெளிப்படுத்தி இயங்கி வருகின்றனர். INSEE I&A நிலையத்தில் முன்னெடுக்கப்படும் ஆய்வு செயற்பாடுகள் அனைத்தும் பெருமளவான சந்தர்ப்பங்களில் பல முதல் தர தயாரிப்புகளை அறிமுகம் செய்வதில் பங்காற்றியிருந்தன.

இதில் இலங்கையின் முதலாவது போர்ட்லன்ட் சுண்ணாம்புக்கல் அரைத்த சீமெந்தான – INSEE சங்ஸ்தா, இலங்கையின் முதன்முறையாய் சாம்பல் கலந்து அரைத்த சீமெந்து, முதலாவது SLSI அங்கிகாரம் பெற்ற சல்பேட்டுக்கு தாக்குபிடிக்கக்கூடிய சீமெந்து மற்றும் முதலாவது பிரித்தானியாவின் தரநியமங்களுக்கமைய உற்பத்தி செய்யப்படும் சல்பேட்டுக்கு தாக்குபிடிக்கத்தக்க குறைந்த வெப்ப சீமெந்தான INSEE எக்ஸ்ட்ரா போன்றன அடங்குகின்றன.

இந்த முன்னோடியான பயணத்தை INSEE சீமெந்து முன்னெடுப்பதுடன், விரைவில் இலங்கையில் முதல் தடவையாக அரைத்த சீமெந்தை (Blended cement) அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. சர்வதேச நிர்மாண செயற்பாடுகளில் அதிகளவு கேள்வியை கொண்டதுடன் slag-based சீமெந்தினால் நீண்ட கால அடிப்படையிலான பெறுபேறுகள் வெளிப்படுத்தப்படுகின்றன. குறிப்பாக இந்த ரக சீமெந்தை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் நிர்மாணங்களின் போது கொங்கிறீற்றினால் வெளியிடப்படும் காபன் அளவு பெருமளவு குறைக்கப்படுகிறது. அத்துடன் நீண்ட காலம் நீடித்திருப்பதுடன் கட்டமைப்புகளின் உறுதித்தன்மையும் அதிகரிக்கிறது. நிலைபேறான எதிர்காலத்தை கட்டியெழுப்புவது எனும் நிறுவனத்தின் அர்ப்பணிப்பின் பிரகாரம் இந்த தயாரிப்பு அமைந்திருக்கும்.

சிறந்த மூன்று அணிகளுக்கு பெறுமதி வாய்ந்த வெகுமதிகள் வழங்கப்படவுள்ளதுடன் INSEE சீமெந்தின் நற்சான்று மற்றும் துறையின் கௌரவிப்பு போன்றனவும் வழங்கப்படும்.

INSEE சீமெந்து ஸ்ரீ லங்கா நிறுவனம் பற்றி

1969 ஆம் ஆண்டு தாய்லாந்தில் நிறுவப்பட்ட தெற்காசிய பிராந்தியத்தில் காணப்படும் மாபெரும் சீமெந்து உற்பத்தியாளரான Siam City சீமெந்து பொது கம்பனி லிமிட்டெட்டின் (SCCC) அங்கத்துவ நிறுவனமாக INSEE சீமெந்து அல்லது Siam City சீமெந்து லங்கா லிமிட்டெட் திகழ்கிறது. INSEE சீமெந்தினால் INSEE வர்த்தக நாமத்திலமைந்த சங்ஸ்தா, மஹாவெலி மறைன், மஹாவெலி மறைன் ப்ளஸ், INSEE றெபிட் ஃபுளோ  INSEE றெபிட் ஃபுளோ ப்ளஸ் மற்றும் INSEE எக்ஸ்ட்ரா சீமெந்து போன்றன உற்பத்தி செய்யப்படுகின்றன. மேலும் விரைவில் INSEE சீமெந்து தனது INSEE Concrete (Ready Mixed) உற்பத்தி நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளது. அத்துடன் தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளில் பலகைக்கு பதிலாக கொங்கிறீற் தளத்தில் அமைக்கப்பட்ட பலகையின் மாற்று தயாரிப்பை இறக்குமதி செய்து வருகிறது. Green Building Council இனால் இலங்கையில் காணப்படும் முதலாவது ‘Green Cement’ தயாரிப்புக்கான Green Labeling சான்றளிக்கப்பட்ட சீமெந்து வகையாக INSEE சங்ஸ்தா திகழ்கிறது. இலங்கையில் காணப்படும் ஒரே ஒன்றிணைக்கப்பட்ட சீமெந்து உற்பத்தியாளராக நிறுவனம் திகழ்கிறது.

தாய் நிறுவனமான Siam City சீமெந்து தனியார் நிறுவனம் (SCCC) தேசத்தின் நிர்மாணத்தேவைகளை நிறைவேற்றுவதில் ஈடுபட்டுள்ளது. தாய்லாந்தின், சராபுரி பிரதேசத்தில் அமைந்துள்ள சீமெந்து உற்பத்தி நிலையம், உலகின் மாபெரும் சீமெந்து உற்பத்தித்தொகுதியாக அமைந்துள்ளது. பல தசாப்த காலப்பகுதிக்கு மேலாக செயற்பாட்டில் உள்ள Siam City சீமெந்து தனியார் நிறுவனம் (SCCC), பரந்தளவு அனுபவம் மற்றும் அறிவு ஆகியவற்றைக் கொண்டு, துரிதமாக வளர்ந்து வரும் இலங்கை போன்ற பிராந்திய சந்தைகளில் முதலீடுகளை மேற்கொள்வது தொடர்பில் கவனம் செலுத்தி வருகிறது. இது நிலைபேறான நிர்மாணத்தில் நம்பிக்கையூட்டுவதாக அமைந்துள்ளது. தனது பிராந்திய சந்தை பிரசன்னத்தை இலங்கைக்கு மேலதிகமாக கம்போடியா, பங்களாதேஷ், வியட்நாம், இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளில் கொண்டுள்ளது.