எதிர்க்கட்சித் தலைவர் விவகாரத்தில் சபாநாயகர் கரு ஜயசூரிய அளித்த தீர்ப்பில் தவறேதும் இல்லை. எதிர்க்கட்சித் தலைவர் பதவி சம்பந்தனிடமிருப்பதே பொருத்தமானது. ஆனால் 70 பேர் உள்ள கூட்டு எதிரணிக்கு சபையில் அதிக நேரத்தை ஒதுக்கிக்கொடுக்க வேண்டும் என்று சுதந்திரக்கட்சி மாற்று அணியின் முக்கியஸ்தர் டிலான் பெரேரா தெரிவித்தார். 

தற்போதைய அரசியல் சூழலில் தமிழர் ஒருவர் எதிர்க்கட்சித் தலைவராக இருப்பதே பொருத்தமான நிலையாகும். அதே போன்று எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனும் தான் முழுநாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் என்பதை மனதில் கொண்டு செயற்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.