மெத்தியூஸின் அதிரடியால் தென்னாபிரிக்காவுக்கு வெற்றியிலக்கு 300

Published By: Vishnu

12 Aug, 2018 | 06:21 PM
image

மெத்தியூஸின் அசத்தலான துடுப்பாட்டம் காரணமாக இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களுக்கு 8 விக்கெட்டுக்களை இழந்து 299 ஓட்டங்களை பெற்று, தென்னாபிரிக்க அணிக்கு வெற்றியிலக்காக 300 ஓட்டங்களை நிர்ணியித்துள்ளது.

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் ஐந்தாவதும் இறுதியுமானதுமான போட்டி இன்று கொழும்பு, ஆர்.பிரேமதாஸ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமானது.

இதில் நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தது. அதன்படி இலங்கை அணி சார்பில் களமிறங்கிய நிரோஷன் திக்வெல்ல மற்றும் உபுல்  தரங்க ஆகியோர் இங்கிலாந்து அணியின் பந்து வீச்சுக்களை அழகான முறையில் எதிர்கொண்டு துடுப்பெடுத்தாடி அணியின் ஓட்ட எண்ணிக்கைக்கு வலுச் சேர்த்தனர்.

இதன்படி இவர்கள் இருவரும் ஜோடி சேர்ந்து 50 ஒட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றுக் கொண்டனர். இதையடுத்து 8.3 ஓவரில் ஜூனியர் டாலாவின் பந்து வீச்சினை எதிர்கொண்ட உபுல் தரங்க விக்கெட் காப்பளரும் தென்னாபிரிக்க அணியின் தலைவருமான டீகொக்கிடம் பிடிகொடுத்து 19 ஓட்டங்களுடன் வெளியேற, அடுத்து களமிறங்கிய குசல் பெரேராவும் நீண்ட நேரம் தாக்குப் பிடிக்காது முல்டரின் பந்து வீச்சில் 8 ஓட்டங்களுடன் கிளேசனிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்து களம் விட்டு நீங்கினார்.

அதன் பின்னர் திக்வெல்லவுடன் ஜோடி சேர்ந்து ஆட ஆரம்பித்த குசல் மெண்டீஸ் திக்வெல்வுக்கு பக்கபலாக இருந்து ஆட்டம் காட்ட ஆரம்பித்தார். 

16.3 ஆவது ஓவரின் போது இலங்கை அணி இரண்டு விக்கெட்டுக்களை இழந்து 100 ஓட்டங்களை தொட்டது. சிறப்பாக ஆடி வந்த திக்வெல்ல மற்றும் குசல் மெண்டீஸ் ஜோடியினர் 54 பந்துகளை எதிர்கொண்டு 50 ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர். இதையடுத்து தென்னாபிரிக்க அணியின் பந்து வீச்சுக்களை சிறப்பாக எதிர்கொண்டு ஆடி வந்த திக்வெல்ல 5 நான்கு ஓட்டங்கள் அடங்களாக 43 ஓட்டங்களுடன் 18.6 ஆவது ஓவரில் பலக்கொய்யோவின் பந்துவீச்சில் டீகொக்கிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். இதன் பின்னர் ஆடுகளம் புகுந்தார் அணியின் தலைவர் மெத்தியூஸ்.

ஒரு கட்டத்தில் இலங்கை அணி 25 ஓவர்களுக்கு மூன்று விக்கெட் இழப்புக்கு 142 ஓட்டங்களை பெற்றுக் கொள்ள 25.2 பந்து வீச்சில் குசல் மெண்டீஸ் 5 நான்கு ஓட்டங்கள் அடங்களாக 38 ஓட்டங்களுடன் மஹாராஜின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். 

இவரைத் தொடர்ந்து தனஞ்ய டிசில்வா மெத்தியூஸுடன் ஜோடி சேர்ந்து ஆடி வர இருவருமாக இணைந்து 53 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை 37.4 ஆவது பந்தில் தனஞ்சய டிசில்வா 30 ஓட்டங்களுடன் முல்டரின் பந்து வீச்சில் ஹேண்ட்ரிக்ஸிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்து வெளியேற திஸர பெரேரா ஆடுகளம் புகுந்தார்.

இதைத் தொடர்ந்து இலங்கை அணி 38.1 ஓவரில் நான்கு விக்கெட்டுக்களை இழந்து 200 ஓட்டங்களை பெற்றது. பின்னர் 39.6 ஓவரில் இலங்கை அணியின் அணித் தலைவர் மெத்தியூஸ் 66 பந்துகளை எதிர்கொண்டு ஆறு நான்கு ஓட்டங்கள் அடங்களாக தனது 37 ஆவது அரைசதத்தினை பூர்த்தி செய்ததுடன் அதன் பின்னர் அதிரடி கட்ட ஆரம்பித்தார்.

ஒரு கட்டத்தில் அணியின் ஓட்ட எண்ணிக்கை 247 ஆக இருக்கும் போது மெத்தியூஸுக்கு தோள் கொடுத்து ஆடி வந்த திஸர பெரேரா 13 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழக்க கடந்த போட்டியில் சிறப்பாக ஆடிய கசூன் சானக்க களமிறங்கினார். 

இறுதியாக இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 299 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. அஞ்சலோ மெத்தியூஸ் ஆட்டமிழக்காது 97 பந்துகளை எதிர்கொண்டு 11 நான்கு ஓட்டங்கள் ஒரு ஆறு ஓட்டம் அடங்களாக 97 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். 

இதன்படி தென்னாபிரிக்க அணிக்கு வெற்றியிலக்காக 300 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது.

பந்து வீச்சில் தென்னாபிரிக்க அணி சார்பாக முல்டர் மற்றும் பெலக்கொய்யோ ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களையும் ஜூனியர் டலா, கேஷவ் மஹாராஜ் மற்றும் ரபடா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49