சூரி­யனை இது­வரை இல்­லாத வகையில் நெருக்­க­மாகச் சென்று ஆய்வு செய்­வ­தற்­காக நாசா தயா­ரித்­துள்ள செயற்­கைக்கோள் இன்று விண்ணில் செலுத்­தப்­பட உள்­ளது. 

சூரியன் குறித்த தக­வலை திரட்டி வர கடந்த 1970 களில் விண்­வெ­ளிக்குச் சென்ற முதல் விண்­க­ல­மான ‘ஹீலியஸ் 2’ சூரி­யனை சுமார் 27 மில்­லியன் மைல் தூரத்தில் இருந்­துதான் ஆய்வு செய்ய முடிந்­தது. 

அதனால் உலக அழிவை ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய சூரிய புயல் (Solar Wind) தொடர்­பான போதிய தக­வல்­களை இது­வரை திரட்ட முடி­ய­வில்லை.

ஒவ்­வொரு நொடியும் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான டிகிரி செல்­ஸியஸ் வெப்­பத்தைக் கக்கும் சூரி­ய­னையே, சுமார் ‘நாற்­பது லட்சம் மைல்கள்’ தொலைவில் அல்­லது மிக அருகில் சென்று ஆய்வு செய்­யக்­கூ­டிய ‘பார்க்கர் சோலார் புரோப்’­எனும் செயற்­கை­கோளை நாசா அனுப்­பு­கி­றது. 

அமெ­ரிக்க நேரப்­படி இன்று அதி­காலை 3.30 மணிக்கு இது அனுப்­பப்­ப­டு­கி­றது. புறப்­ப­டு­வ­தற்கு 70 சத­வீதம் வானிலை சாத­க­மாக உள்­ள­தாக நாசா கூறி­யுள்­ளது.

சூரியன் மற்றும் பெரும் அழிவை ஏற்­ப­டுத்தக் கூடிய ‘சூரி­யப்­புயல்’ அல்­லது சூரிய பரு­வ­நிலை தொடர்­பான புதிய தக­வல்­களை சேக­ரித்து பூமிக்கு அனுப்பக் கூடிய இந்த பார்க்கர் சோலார் புரோப், சூரிய பரப்பின் 64 லட்சம் கி.மீ பகு­தியில் பறக்கும் என்றும், சுமார் 1,400 செல்­ஸியஸ் (2,500 பாரனைட்) வெப்பம் மற்றும் மிகப்­பெ­ரிய கதி­ரி­யக்­கத்­தையும் தாங்கி, எதிர்­கொண்டு ஆய்வு செய்யும் திறன்­கொண்­டது என்றும் கூறப்­ப­டு­கி­றது. 

சூரி­யனின் வெப்பம் மிகுந்த கரோனா பகு­தியில் பார்க்கர் சோலார் புரோப் பய­ணித்து ஆய்வு செய்யும். 

ஏனென்றால், இந்த செயற்­கைகோள் அதீத தட்­ப­வெப்ப நிலை­களைத் தாங்கும் சுமார் 11.4 செ.மீ (4.5 அங்­குலம்) தடிமன் உள்ள கார்பன் காம்­போ­சிட்டால் ஆன கவ­சத்தைக் கொண்­டது என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. 

மணிக்கு சுமார் 7,25,000 கி.மீ வேகத்தில் பறக்கக் கூடிய திறன்­கொண்ட பார்க்கர் சோலார் புரோப், சுமார் 6 வருடங்கள் மற்றும் 11 மாதங்களில் சூரியனை 24 முறை சுற்றி வந்து ஆய்வு செய்யும் என்கிறது நாசா.