(இரோஷா வேலு) 

கொழும்பில் இருவேறுப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போது ஹெரோயின் போதைப் பொருளுடன் மூவரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கல்கிஸ்ஸை பகுதியில் விசேட அதிரடிப் படை பிரிவு பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது 5 கிராம் 620 மில்லிகிராம் ஹெரோயினுடன் 54 வயதுடைய ஒருவரை கைதுசெய்ததுடன் அவரை கல்கிஸ்ஸை நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது நீதிவான் அவரை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியில் வைக்க உத்தரவிட்டார். 

மேலும் வெலிகட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் 2 கிராம் 50 மில்லிகிராம் ஹெரோயினுடன் இராஜகிரியவைச் சேர்ந்த ஒருவரையும், 2 கிராம் 60 மில்லிகிராம் ஹெரோயினுடன் கொதடுவையைச் சேர்ந்த ஒருவரையும் வெலிகட பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.