அம்பாறை, ஒலுவிவில் பிரதேசத்தில் உள்ள மீனவர்களின் படகுகள் மற்றும் வள்ளங்கள் என்பன கடல் அலைகளின் தாக்கத்தினால் பாரியளவில் சேதமடைந்துள்ளதனால் தமது வாழ்வாதாரங்கள் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அப் பகுதி மீனவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர். 

அத்துடன் ஒலுவில் பிரதேசத்தில் அமையப் பெற்றுள்ள துறைமுக நிர்மாணப் பணியின் இப்பகுதியில் உள்ள கடற்பிராந்தியங்களில் பாறாங்கற்கள் போடப்பட்டமையினால் அப் பகுதியில் கடலரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் மீனவர்களின் வாடிகள் மற்றும் தென்னந்தோப்புக்கள் மற்றும் படகுகள் என்பன பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் மேலும் சுட்டிக்காட்டினர்.